போர் பதற்றம்... சரிவுடன் முடிவடைந்த இந்திய பங்குச்சந்தை

share on:
Classic

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிக்குள் இந்திய இராணுவம் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து ஏற்பட்ட பதற்றம் காரணமாக இந்திய பங்குச்சந்தை வர்த்தகம் சரிவுடன் முடிவடைந்தது. 

பதிலுக்கு பதில் தாக்குதல்களால் இந்தியா - பாகிஸ்தான் இடையே அசாதாரண சூழல் நிலவுகிறது. இன்று அதிகாலை ஆரம்பித்த பதற்றமான சூழலானது இப்போது வரை தொடர்ந்து வருகின்றது. இந்த பதற்றமானது இந்திய பங்குச்சந்தையிலும் இன்று எதிரொலித்தது. 

பச்சைக்கொடியுடன் வர்த்தகத்தை தொடங்கிய மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 239 புள்ளிகள் சரிவுடன் 35,973 புள்ளிகளில் வர்த்தகம் முடிவடைந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 44 புள்ளிகள் சரிவைக் கண்டு 10,835 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. போர் பதற்றம் மற்றும் சர்வதேச பொருளாதார காரணிகளால் தான் இந்திய பங்குச்சந்தை இன்று சரிவுடன் முடிவடைந்ததாக பங்குச்சந்தை வல்லுனர்கள் தெரிவித்தனர். 

தேசிய பங்குச்சந்தையில் ஸீல், டாடா மோட்டார்ஸ், ஐஓசி, கோல் இண்டியா, டிசிஎஸ் உள்ளிட்ட நிறுவன பங்குகள் 2.39% முதல் 6.01% வரை ஏற்றம் கண்டன. இதேபோல், இண்டியா புல்ஸ் ஹவுஸிங், ஹெச்.சி.எல்.டெக், ஹெச்.டி.எஃப்.சி., ஐசிஐசிஐ வங்கி மற்றும் இன்ஃபோஸிஸ் உள்ளிட்ட நிறுவன பங்குகள் 1.77% முதல் 3.49% வரை நஷ்டமடைந்தன. 

News Counter: 
100
Loading...

mayakumar