போர் பதற்றம் எதிரொலி... சென்செக்ஸ் 545 புள்ளிகள் சரிவு

share on:
Classic

போர் பதற்றம் காரணமாக இந்திய பங்குச்சந்தை நேற்றைப் போல் இன்றும் ஆட்டம் கண்டு வருகின்றது. 

இன்றைய நாளுக்கான இண்ட்ராடே வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 545 புள்ளிகளும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 161 புள்ளிகளும் சரிவைக் கண்டன. முற்பகல் நேர வர்த்தகத்தில் இது தான் மிகப்பெரிய சரிவாக பதிவானது. 

காஷ்மீர் எல்லையில் இந்தியாவும் பாகிஸ்தானும் பரஸ்பரம் தாக்குதல் நடத்தி வருவதன் காரணமாகவே இந்திய பங்குச்சந்தை வர்த்தகம் இந்தளவு பாதாளத்தில் பாய்ந்தது. இந்த சரிவிலிருந்து மீண்டு வரும் முயற்சியில் இந்திய பங்குச்சந்தை தற்போது மும்முரமாக உள்ளது. 

சற்று முன்னர் நிலவரப்படி, சென்செக்ஸ் 103 புள்ளிகள் சரிவைக் கண்டு 35,870 புள்ளிகளிலும், நிஃப்டி 43 புள்ளிகள் சரிந்து 10,791 புள்ளிகளிலும் வர்த்தகமானது. 

News Counter: 
100
Loading...

mayakumar