பங்குச்சந்தை 2-வது நாளாக ஏறுமுகம்... அதிக லாபம் ஈட்டிய பங்கு எது தெரியுமா...?

share on:
Classic

தொடர்ந்து 2-வது நாளாக இந்திய பங்குச்சந்தை வர்த்தகம் ஏற்றத்துடன் நிறைவடைந்தது. 

இன்றைய நிலவரம்:
மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 142 புள்ளிகள் உயர்ந்து 35,898 புள்ளிகளில் இன்றைய நாளுக்கான வர்த்தகம் முடிவடைந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 54 புள்ளிகள் ஏற்றம் கண்டு 10,789 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. 

ஏற்றமும் சரிவும்:
நிப்டி50-யில் இண்டியாபுல்ஸ், பஜாஜ் ஃபினான்ஸ், டாடா மோட்டார்ஸ், ரெட்டீஸ், வேதாந்தா நிறுவனங்களின் பங்கு மதிப்பு 2% - 6% வரை ஏற்றம் கண்டன. இன்ஃப்ராடெல், யெஸ் வங்கி, இன்ஃபோஸிஸ் லிமிட்டட், என்.டி.பி.சி., கோல் இண்டியா உள்ளிட்ட நிறுவன பங்குகளின் மதிப்பு 0.54% - 1.87% வரை சரிவைக் கண்டன. தேசிய பங்குச்சந்தையில் (நிப்டி50) வர்த்தகமான 50 நிறுவன பங்குகளில் 14 பங்குகள் சரிவைக் கண்ட நிலையில் 36 பங்குகளின் மதிப்பு ஏற்றமடைந்தன. 

பொதுத்துறை வங்கிகளின் ஆதிக்கம்:
12 பொதுத்துறை வங்கிகளின் மறு மூலதன ஆக்கத்திற்காக ரூ. 48,239 கோடி நிதியை வழங்க மத்திய அரசு நேற்று ஒப்புதல் வழங்கியது. இதையடுத்து, இன்றைய பங்குச்சந்தை வர்த்தகத்தில் பொதுத்துறை வங்கிகளின் பங்குகள் மதிப்பு 0.50% வரை உயர்ந்தது. முன்னதாக, இன்றைய இண்ட்ராடே (Indraday) வர்த்தக நேரத்தில் பொதுத்துறை வங்கிகளின் பங்கு மதிப்பு 1.66%-ஆக உச்சம் பெற்று காணப்பட்டது. குறிப்பாக, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, இந்திய யுனைட்டட் வங்கி, யூகோ வங்கி, இந்திய செண்ட்ரல் வங்கி, ஆந்திரா வங்கி உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகள் 6.25% - 8.12% என்ற உச்சத்தை எட்டின. 

News Counter: 
100
Loading...

mayakumar