தேர்தலில் பாஜக வெற்றி...! இந்திய பங்குச்சந்தை ஏறுமுகம்

share on:
Classic

மக்களவை தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் இந்திய பங்குச்சந்தை வர்த்தகம் இன்றும் ஏற்றத்துடன் நிறைவடைந்தது. 

மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 623 புள்ளிகள் உயர்ந்து 39,434 புள்ளிகளில் வர்த்தகம் முடிவடைந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 187 புள்ளிகள் ஏற்றம் கண்டு 11,844 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. 

தேசிய பங்குச்சந்தையில் ஐசிஐசிஐ வங்கி, வேதாந்தா, டாடா ஸ்டீல், பார்தி ஏர்டெல் மற்றும் ஸீல் உள்ளிட்ட நிறுவன பங்குகளின் விலையானது 4.16% - 5.27% வரை உயர்ந்தது. டெக் மஹேந்திரா, என்.டி.பி.சி., டி.சி.எஸ்., ஓ.என்.ஜி.சி., ஹெச்.சி.எல்.டெக் போன்ற நிறுவன பங்குகளின் விலை 0.02% - 0.85% வரை சரிவைக் கண்டது. 

News Counter: 
100
Loading...

mayakumar