கடந்த வாரத்தில் ஆட்டம் காட்டிய பங்குச்சந்தை...! ஹீரோ யார்? ஜீரோ யார் தெரியுமா?...

share on:
Classic

கடந்த வாரத்திற்கான இந்திய பங்குச்சந்தை வர்த்தகத்தில் சர சர ஏற்றம், விறு விறு இறக்கம் என பல்வேறு அதிரடிகள் மாற்றங்கள் நிகழ்ந்தன. 

கடந்த வார நிலவரம்:
3 வாரங்களாக ஆதிக்கம் செலுத்தி வந்த இந்திய பங்குச்சந்தை வர்த்தகம் கடந்த வாரம் மட்டும் சற்று பின்னடைவை சந்தித்தது. கடந்த 3-ஆம் தேதி நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 12,103 புள்ளிகளை முதன்முறையாக எட்டி வரலாற்று சாதனை படைத்தது. அதே நேரம் 11,900 புள்ளிகளை கூட எட்ட முடியாமல் நிஃப்டி தடுமாறியதையும் நம்மால் பார்க்க முடிந்தது. வங்கி மற்றும் ஐடி துறை பங்குகள் விலை கணிசமாக ஏற்றம் கண்டதன் காரணமாக தேசிய பங்குச்சந்தை சற்று பெருமூச்சு விட்டது. மறுபுறம் ஆட்டோமொபைல், FMCG மற்றும் உலோகத்துறை பங்குகளின் விலை சற்று ஏறுமுகத்தில் வர்த்தகமாயின. சென்செக்ஸிலும் இதே நிலை தான். முந்தைய 3 வாரங்களோடு ஒப்பிடுகையில் சென்செக்ஸ் ஒட்டுமொத்தமாக 0.25 சதவிகிதமும், நிஃப்டி 0.44 சதவிகிதமும் சரிவை சந்தித்தன. 

விலையேறிய டாப்-5 பங்குகள்:

1) 'பவர் ஃபினான்ஸ் கார்ப்பரேஷன்' நிறுவன பங்கு விலை 9.2 சதவிகிதம் வரை ஏற்றம் கண்டது. இந்த ஏறுமுகம் காரணமாக பவர் ஃபினான்ஸ் கார்ப்பரேஷன் நிறுவன பங்கொன்றின் விலை ரூ. 134.15-ஆக அதிகரித்துள்ளது. 

2) 'ஹவெல்ஸ் இண்டியா' நிறுவன பங்கு விலை 8.95 சதவிகிதம் வரை ஏற்றம் கண்டது. இந்த ஏறுமுகம் காரணமாக ஹவெல்ஸ் இண்டியா நிறுவன பங்கொன்றின் விலை ரூ. 789-ஆக அதிகரித்துள்ளது.

3) 'பெர்ஜர் பெயிண்ட்ஸ்' நிறுவன பங்கு விலை 8.69 சதவிகிதம் வரை உயர்ந்தது. இந்த ஏறுமுகத்தால் பெர்ஜர் பெயிண்ட்ஸ் நிறுவன பங்கொன்றின் விலை ரூ. 325.20-ஆக அதிகரித்துள்ளது.

4) 'வோல்டாஸ்' நிறுவன பங்கு விலை 7.92 சதவிகிதம் வரை உயர்ந்தது. இந்த ஏறுமுகத்தால் வோல்டாஸ் நிறுவன பங்கொன்றின் விலை ரூ. 617.45-ஆக அதிகரித்துள்ளது.

5) 'இன்ஃபோ எட்ஜ்' நிறுவன பங்கு விலை 6.99 சதவிகிதம் வரை ஏற்றம் கண்டது. இந்த ஏறுமுகத்தால் இன்ஃபோ எட்ஜ் நிறுவன பங்கொன்றின் விலை ரூ. 2,317-ஆக அதிகரித்துள்ளது. 

 

விலை சரிந்த டாப்-5 பங்குகள்:

1) 'DHFL' நிறுவன பங்கு விலை 26.98 சதவிகிதம் வரை கடுமையாக சரிந்தது. இந்த இறங்குமுகத்தால் DHFL நிறுவன பங்கொன்றின் விலை ரூ. 83.25-ஆக குறைந்துள்ளது.

2) 'மன்பஸண்ட் பெவரேஜஸ்' (Manpasand Beverages) நிறுவன பங்கு விலை 26.53 சதவிகிதம் வரை சரிவை சந்தித்தது. இதனால் இந்நிறுவன பங்கொன்றின் விலை ரூ. 42-ஆக குறைந்துள்ளது.

3) 'பிசி ஜுவல்லர்' (PC Jeweller) நிறுவன பங்கு விலை 22.53 சதவிகிதம் வரை சரிந்தது. இதனால் இந்நிறுவன பங்கொன்றின் விலை ரூ. 62-ஆக குறைந்துள்ளது.

4) 'ஜெட் ஏர்வேஸ்' நிறுவன பங்கு விலை 16.71 சதவிகிதம் வரை சரிந்தது. ஜெட் ஏர்வேஸ் நிறுவன பங்கொன்றின் விலை ரூ. 124.90-ஆக குறைந்துள்ளது.

5) 'கெயில் இண்டியா' நிறுவன பங்கு விலை 12.7 சதவிகிதம் வரை சரிவை சந்தித்தது.  இந்நிறுவன பங்கொன்றின் விலை ரூ. 313.75-ஆக சரிந்துள்ளது.

மும்பை பங்குச்சந்தையின் (BSE 500) 4 நாட்கள் வர்த்தகத்தில் 20 நிறுவன பங்குகளின் விலையானது 10% - 30% வரை கடுமையான சரிவை எதிர்கொண்டிருந்தன. இதில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், ராடிகோ கைடன், எடல்வெயிஸ் ஃபினான்சியல் சர்வீசஸ், க்வாலிட்டி, ஜெய்பிரகாஷ் அசோசியேஷன்ஸ், ரிலையன்ஸ் பவர், ரிலையன்ஸ் இன்ஃப்ரா மற்றும் ஈராஸ் இண்டர்னேஷ்னல் மீடியா போன்ற ஜாம்பவான் நிறுவனங்களும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

News Counter: 
100
Loading...

mayakumar