இந்திய பங்குச்சந்தை தொடர்ந்து ஏறுமுகம்... 4-வது நாளாக ஆதிக்கம்

share on:
Classic

இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து 4-வது நாளாக ஏற்றத்துடன் முடிவடைந்துள்ளன. 

இன்று பிற்பகல் நேர முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 34 புள்ளிகள் ஏற்றம் கண்டு 36,616 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 22 புள்ளிகள் உயர்ந்து 10,934 புள்ளிகளில் வர்த்தகம் முடிவடைந்தது. ரிசர்வ் வங்கியின் மூன்று நாட்கள் கொள்கைக் கூட்டத்தை முன்னிட்டு இந்திய பங்குச்சந்தைகள் இன்று ஏற்றத்துடன் முடிவடைந்துள்ளதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். ஸீல், டைட்டன், யூ.பி.எல்., ரெட்டீஸ், ஹீரோ மோட்டோகார்ப் உள்ளிட்ட நிறுவன பங்குகள் ஏற்றம் கண்ட அதேவேளை கோல் இண்டியா, டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், யெஸ் வங்கி மற்றும் ஓ.என்.ஜி.சி. உள்ளிட்ட நிறுவன பங்குகள் நஷ்டத்தை சந்தித்தன. 

News Counter: 
100
Loading...

mayakumar