பாதாளத்தில் விழுந்தது இந்திய பங்குச்சந்தை...!

share on:
Classic

இந்திய பங்குச்சந்தை வர்த்தகம் கடும் சரிவுடன் முடிவடைந்தது. 

மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 353 புள்ளிகள் சரிந்து 38,585 புள்ளிகளில் வர்த்தகம் முடிவடைந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 87 புள்ளிகள் சரிவைக் கண்டு 11,584 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.  நிஃப்டி50-யில் வர்த்தகமான 50 நிறுவன பங்குகளில் 21 பங்குகளின் மதிப்பு ஏற்றத்தையும், 29 பங்குகளின் மதிப்பு சரிவையும் சந்தித்தன. 

மும்பை பங்குச்சந்தையில் வர்த்தகமான 1,134 நிறுவன பங்குகள் மதிப்பு ஏறுமுகத்துடனும், 1,369 பங்குகள் மதிப்பு இறங்குமுகத்துடனும், 173 பங்குகளின் மதிப்பு எவ்வித மாற்றமும் இல்லாமல் காணப்பட்டது. 

தேசிய பங்குச்சந்தையில் டாடா மோட்டார்ஸ், சிப்லா, விப்ரோ, அதானி போர்ட்ஸ், ஹிந்துஸ்தான் யூனிலீவர் உள்ளிட்ட நிறுவன பங்குகளின் மதிப்பு 1.10% - 4.81% வரை ஏற்றம் கண்டன. பார்தி ஏர்டெல், ஹிண்டால்கோ, ஏஸியன் பெயிண்ட்ஸ், டிசிஎஸ், யூபிஎல் உள்ளிட்ட நிறுவன பங்குகளின் மதிப்பு 2.22% - 3.74% வரை சரிவை சந்தித்தன. 

News Counter: 
100
Loading...

mayakumar