இந்திய அணியில் நீடிக்கும் குழப்பம்..!

share on:
Classic

தவான் காயம் காரணமாக ஆட்டத்தில் இருந்து விலகியதாக கூறப்பட்ட நிலையில் அவருக்கு பதிலாக அணியில் ரஹானே அல்லது ரிஷாப் பந்த் மாற்று வீரராக அறிவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் மாற்று வீரர் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பில்லை எனவும் அணியில் தவானே தொடர்வார் என பிசிசிஐ அறிவித்துள்ளது. 

இந்திய அணி விளையாடிய இரண்டு லீக் ஆட்டங்களிலும் வெற்றி பெற்று புள்ளிபட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது. இதற்கு முக்கிய காரணம் தொடக்க ஆட்டக்காரர்கள் தான், முதல் ஆட்டத்தில் ரோஹித் சர்மா 122 ரன்கள் எடுத்து அணியை வெற்றி பெற வைத்தார். இரண்டாவது ஆட்டத்தில் 117 ரன்கள் எடுத்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச்சென்ற தவான் ஆட்டத்தின் போது காயமைடைந்தார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் 3 வாரம் வரை தவான் ஓய்வில் இருக்க வேண்டும், என கூறியதால் தவான் அணியில் இருந்து விலக இருப்பதாக தகவல்கள் வந்தன. இந்நிலையில் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ள பிசிசிஐ, அணியில் தவானுக்கு பதில் மாற்று வீரர் யாரும் சேர்க்கப்பட மாட்டாது அணியில் தவானே தொடர்வார் என தெரிவித்துள்ளது.
 
இந்நிலையில் ராகுல் ரோஹித்துடன் தொடக்க வீரராக களமிறங்கினால், அவர் விளையாடும் 4-வது இடத்தை நிரப்பப்போவது யார் என்ற குழப்பம் அணியில் நிலவிவருகிறது.. 

News Counter: 
100
Loading...

Saravanan