இதுவரை 3.79 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்... மத்திய அரசின் அந்தர் பல்ட்டி

share on:
Classic

மத்திய அரசில் இதுவரை 3.79 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டிருப்பதாக பியூஸ் கோயல் பட்ஜெட்டில் தெரிவித்திருந்த புள்ளிவிவரம் இப்போது வைரலாகத் தொடங்கியுள்ளது.

பக்கோடா பாய்ஸ்...?
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உண்டாக்கித் தருவதில் மோடி தலைமையிலான மத்திய அரசு தோல்வி அடைந்திருப்பதாக காங்கிரஸ் உட்பட எதிர்கட்சியினர் பலர் குற்றம்சுமத்தி வருகின்றனர். இந்த நிலையில், மத்திய அரசு 3.79 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தந்திருப்பதாக மத்திய இடைக்கால நிதியமைச்சர் பியூஸ் கோயல் கூறியிருப்பது தற்போது மிகப்பெரிய பேசுபொருளாக உருவெடுத்துள்ளது. கடந்த 1-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட போது பியூஷ் கோயல் இந்த தகவலை வெளியிட்டிருந்தார். 

 

3.79 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள்:
கடந்த 2017 மற்றும் 2018-ஆம் ஆண்டிற்குள் மத்திய அரசில் அங்கம் வகிக்கும் பல்வேறு துறைகளில் 2,51,279 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டதாக பியூஸ் தெரிவித்துள்ளார். இந்த எண்ணிக்கையானது அடுத்த மாதத்திற்குள் 3,79,544-ஆக உயர்ந்து 36,15,770-ஐ தொட்டுவிடும் என்றும், ரயில்வே, காவல் படை, நேரடி மற்றும் மறைமுக வரி உள்ளிட்ட துறைகளில் தான் அதிக்கப்படியான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். எந்தெந்த துறையில் எத்தனை புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டிருப்பதாக பியூஸ் கோயல் அளித்த புள்ளிவிவரம் பின்வருமாறு,

இந்திய ரயில்வே துறை: கடந்த 2017 மார்ச் வரை 12,70,714-ஆக இருந்த வேலைவாய்ப்புகளிலிருந்து அடுத்த மாதத்திற்குள் 98,999 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கம். 

காவல்துறை: கடந்த 2017 மார்ச் வரை 10,52,351-ஆக இருந்த வேலைவாய்ப்புகளிலிருந்து தற்போது 79,353 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கம். 

நேரடி வரி விதிப்புத்துறை: கடந்த 2017 மார்ச் வரை 50,208-ஆக இருந்த வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை அடுத்த மாதத்திற்குள் 80,143-ஆக உயர்த்தப்படும்.

மறைமுக வரி விதிப்புத்துறை:  கடந்த 2017 மார்ச் வரை 53,394-ஆக இருந்த வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை கடந்தாண்டு மார்ச்சில் 92,842-ஆக உயர்ந்தது. இந்த வலுவான நிலை அடுத்த மாதமும் தொடரும் என கணிக்கப்பட்டுள்ளது. 

விமான போக்குவரத்துத்துறை: வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கையானது அடுத்த மாதத்திற்குள் 2,363-ஆக உயர்த்தப்படும். இது கடந்தாண்டு வெறும் 1,174-ஆக மட்டுமே இருந்தது. 

அஞ்சல் துறை: கடந்த 2017 மார்ச் வரை 4,18,818-ஆக இருந்த வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை அடுத்த மாதத்திற்குள் 4,21,068-ஆக உயர்த்தப்படும்.

வெளியுறவுத்துறை: இதுவரை 10,044 பேர் மட்டுமே பணிபுரிந்து வந்த நிலையில் இந்த எண்ணிக்கையானது அடுத்த மாதத்திற்குள் 11,877 பேராக உயர்த்தப்படும். 

News Counter: 
100
Loading...

mayakumar