நியூசிலாந்திடம் இந்திய அணி தோல்வி

share on:
Classic

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து பெண்கள் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியா - நியூசிலாந்து பெண்கள் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட தொடரின் முதலாவது 20 ஓவர் போட்டி வெலிங்டனில் நடைபெற்றது. இதில் முதலில் களமிறங்கிய நியூசிலாந்து பெண்கள் அணி, 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக அந்த அணியின் வீராங்கனை சோபி தெவைன் 62 ரன்கள் எடுத்தார்.

160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில், மந்தனா 34 பந்துகளில் 58 ரன்கள் குவித்தார். பின்னர் வந்த வீராங்கனைகள் சரியான ஆட்டத்தை வெளிப்படுத்தாததால், 136 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து, 23 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

 

News Counter: 
100
Loading...

aravind