நியூசிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இந்திய மகளிர் அணி பேட்டிங்

share on:
Classic

நியூசிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இந்திய மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்து விளையாடி வருகிறது.

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மிதாலிராஜ் தலைமையிலான இந்திய மகளிர் அணி, 3 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில், முதல் இரு ஆட்டங்களில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி தொடரை வென்ற நிலையில், 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி, ஹாமில்டனில் இன்று நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற நியூசிலாந்து அணி, ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து பேட்டிங் செய்யத் தொடங்கிய இந்திய அணிக்கு, ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. கடந்த இரு ஆட்டங்களிலும் இந்தியாவின் வெற்றிக்கு வித்திட்ட தொடக்க வீராங்கனை மந்தனா, ஒரு ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். பின்னர், ரோட்ரிக்சும் 12 ரன்களில் வெளியேறினார்.  தனது 200-வது போட்டியில் களமிறங்கிய கேப்டன் மிதாலி ராஜ், 9 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். சற்று நிலைத்து ஆடிய கவுர், 24 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால், 87 ரன்களை சேர்ப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறி வருகிறது.

News Counter: 
100
Loading...

aravind