டி-20 : இறுதி வரை போராடிய இந்திய மகளிர் அணி

Classic

நியூசிலாந்து மகளிர் அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில், இந்திய மகளிர் அணி போராடி தோல்வி அடைந்தது. இதன் மூலம் டி20 தொடரை நியூசிலாந்து அணி முழுவதுமாக கைப்பற்றியது.

முதல் மற்றும் இரண்டாவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான ஹாமில்டனில் நடைபெற்றது. முதலில் விளையாடிய நியூசிலாந்து மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 161 ரன்கள் குவித்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய மகளிர் அணியில், சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை பறிகொடுத்து திணறியது. மறுமுனையில் மந்தனா மட்டும் பொறுப்புடன் விளையாடினார். 86 ரன்கள் குவித்த நிலையில் அவர் ஆட்டமிழந்தார். இறுதியில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து 2 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து மகளிர் அணி வெற்றி பெற்று தொடரை முழுவதுமாக கைப்பற்றியது.

News Counter: 
100
Loading...

vinoth