இந்திய மக்கள் அதிர்ஷ்டசாலிகள் : மோடியின் வெற்றி குறித்து டிரம்ப் வாழ்த்து..!!

share on:
Classic

மக்களவைத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்ற நரேந்திர மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். 

இதுதொடர்பாக டிவிட்டரில் பதிவிட்டுள்ள அவர் “ மோடியை தொடர்புகொண்டு அவர் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்தேன். இந்திய மக்களுக்கு மிகப்பெரிய தலைவராகவும், சிறந்த மனிதராகவும் அவர் உள்ளார்.  இந்திய மக்கள் அதிர்ஷ்டசாலிகள். மோடி மீண்டும் பதவிக்கு வந்ததன் மூலம் இந்திய - அமெரிக்க உறவு மேலும் வலுவடையும். அவருடன் இணைந்து பணியாற்ற நான் காத்திருக்கிறேன்” என்று ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஜப்பானில் ஜுன் 29-30ல் நடைபெற உள்ள ஜி-20 மாநாட்டில் ட்ரம்பும், மோடியும் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதேபோல் இலங்கை அதிபர் சிறிசேனா, சவுதி அரேபிய அரசர் சல்மான் பின் அப்துல் அசிஸ், சவுதி இளவரசர் முகமது பின் சல்மான், முன்னாள் நேபாள பிரதமர் புஷ்பா தஹல் உள்ளிட்ட பல உலகத்தலைவர்களும் மோடி வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
 

News Counter: 
100
Loading...

Ramya