இந்தியாவுக்கான நேரடி அந்நிய முதலீடு 7 சதவீதம் சரிவு...

share on:
Classic

இந்தியாவுக்கான நேரடி அந்நிய முதலீடு 7 சதவீதம் சரிவடைந்துள்ளதாக மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அந்த அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை படி கடந்த நிதியாண்டில் ஏப்ரல் முதல் டிசம்பர் வரை 35.94 பில்லியன் டாலராக இருந்த அந்நிய முதலீடு, இந்த நிதியாண்டில் அதே இடைவெளியில், 33.49 பில்லியன் டாலராக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த முதலீடு கடந்த நிதியாண்டைவிட 7% குறைவு என மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த நிதியாண்டில் சேவைத் துறை 5.91 பில்லியன் டாலரும், கணினி மென்பொருள் மற்றும் வன்பொருள் துறை 4.75 பில்லியன் டாலரும் முதலீடு பெற்றுள்ளதாக அந்த அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் அதிபட்சமாக சிங்கப்பூர் 12.97 பில்லியன் டாலர்களையும், மொரிஷியஸ் 6 பில்லியன் டாலர்களையும், நெதர்லாந்து 2.95 பில்லியன் டாலர்களையும் இந்தியாவில் முதலீடு செய்துள்ளன.

News Counter: 
100
Loading...

sajeev