IMF-ன் தலைமை பதவியில் கலக்கவிருக்கும் முதல் இந்தியர் கீதா கோபிநாத்..!

share on:
Classic

சர்வதேச பன்னாட்டு நிதியத்தின் (IMF) முதன்மை பதவியை வகிக்கும் முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார் பெங்களூரை சேர்ந்த கீதா கோபிநாத் .

IMF என்றால் என்ன..?

189 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட இந்த அமைப்பு நிலையான பண பரிவர்தனை, சர்வதேச வணிகம், நிலையான வேலைவாய்ப்பு வழங்குதல், வறுமையை ஒழித்தல் போன்ற கோட்பாடுகளுடன் இயங்கி வருகிறது.1945 ஆம் ஆண்டு ஆரம்பிக்க பட்ட இந்த அமைப்பு சர்வதேச அளவில் உறுப்பினர் நாடுகள் சுமூகமான முறையில் பண பரிவர்த்தனை செய்ய உதவி செய்கிறது.

யார் ந்த கீதா கோபிநாத்:

கீதா கோபிநாத் கொல்கத்தாவில் பிறந்தவர். 1971ல் பிறந்த இவர் அமெரிக்க குடியுரிமையும் வைத்து இருக்கிறார். ஹார்வேர்ட் பல்கலைக்கழகத்தில் இவர் பேராசிரியராகவும் இருக்கிறார். சர்வதேச பன்னாட்டு நிதியத்தின் இயக்குனராகும் மூன்றாவது பெண் இவர்தான். சர்வதேச பன்னாட்டு நிதியத்தின் மூன்றாவது பெண் தலைமை செயலாளராக உள்ளார். 

"மிகவும் கவுரவமான தருணம்“

ஐஎம்எஃப் அமைப்பின் தலைமை பொருளாதார இயக்குனராக இருந்த 'மவுரிஸ் ஓப்ஸ்பேல்ட்' ஓய்வு பெரும் நிலையில் உள்ளார். அவரது நாற்காலியை தான் கீதா கோபிநாத்  பிடித்துள்ளார். இது குறித்து பேசிய கீதா கோபிநாத் அவர்கள்"மிகவும் கவுரவமான தருணம்.சர்வதேச அளவில் வறுமையை நீக்கி மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதில் வணிகம் பெரும் பங்கு வகிக்கிறது. பண பரிவர்த்தனை குறித்த ஆய்வுகளில், சர்வதேச பொருளாதாரம் மற்றும் வணிகத்தில் டாலரின் பங்கு என்ன என்பதை முதன்மை படுத்த விரும்புகிறேன். அதை தெளிவுபடுத்தினாலே வணிகம் சார்ந்த பல பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைத்து விடும்" என்று கூறியுள்ளார்.

 

News Counter: 
100
Loading...

sankaravadivu