இண்டிகோ நிறுவன பங்குகளை விற்க தயாராக இல்லை..!!

share on:
Classic

இண்டிகோ நிறுவனத்தின் இணை நிறுவனரான ராகேஷ் கங்வால், அந்நிறுவனத்தின் பங்குகளை விற்க தயாராக இல்லை என தெரிவித்துள்ளார்.

கார்பரேட் நிறுவனங்களை இயங்கக்கூடிய விதிமுறைகளையும், செயல்முறைகளையும் பின்பற்றவில்லை என இண்டிகோ நிறுவனத்தின் பங்குதாரரான பாட்டியா மீது ராகேஷ் கங்வால் குற்றம் சாட்டியுள்ளார். இதனால் இருவருக்கும் கருத்து வேற்பாடு ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து தனது பங்குகளை விற்கவோ, உயர்த்தவோ எனக்கு விருப்பமில்லை என தொலைபேசி மூலம் கங்வால் தெரிவித்துள்ளார். 

முன்னாள் விமான விற்பனையாளரான கங்வால், பாட்டியாவுடன் இணைந்து 2005 ஆம் ஆண்டு இண்டிகோவை உருவாக்கினார். நாளடைவில் இந்த நிறுவனம் விமான சேவையின் முன்னனி நிறுவனமாக திகழ்ந்து வருகிறது. அமெரிக்காவின் ஏர்வேஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான கங்வால் மற்றும் பங்கு தாரர்கள் இன்டர் குளோப் ஏவியேஷன் லிமிடெட் நிறுவனத்தின் 37 சதவீதத்தை வைத்துள்ளனர். பாட்டியா விதிமுறைகளை மீறி செயல்படுவதாக ராகேஷ் கங்வால்  தெரிவித்துள்ளார். இதுவே இவர்கள் பிரச்சனைக்கு முக்கிய காரணமாக இருந்தது. தற்போது இண்டிகோ நிறுவனத்தின் செயல்பாடுகளில் கூடுதல் கவனம் செலுத்துவதாக கங்வால் தெரிவித்துள்ளார்.

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan