அதிக லாபம் ஈட்டிய இண்டிகோ...!

share on:
Classic

இண்டிகோ இதுவரை இல்லாத அளவுக்கு அதிக லாபம் ஈட்டியுள்ளது. 

இந்தியாவின் மிகப் பெரிய விமான நிறுவனமான இண்டிகோ, ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் மிக உயர்ந்த காலாண்டு லாபமாக ரூ.1,203 கோடியை ஈட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது. ஒரு வருடத்திற்கு முன்பு இந்நிறுவனத்தின் காலாண்டு லாபம் ரூ. 27 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இது ஜெட் ஏர்வேஸின் வீழ்ச்சியால் இண்டிகோ விமான நிறுவனத்திற்கு கிடைத்த லாபம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிறுவனத்தின் ஆண்டு வருவாய் 45% உயர்ந்து ரூ.9,420 கோடியாக உயர்ந்துள்ளதாக இண்டிகோ தெரிவித்துள்ளது. நடப்பு நிதியாண்டில் பயணிகளின் இருக்கை மற்றும் விமானத்தின் பயணிக்கும் கிலோமீட்டர் தொலைவில் 30% வரை வளர்ச்சியடையும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.       

News Counter: 
100
Loading...

udhaya