"சாலை வசதி சிறப்பாக இருந்தால்தான் தொழில்துறை வளர்ச்சியடையும்"

share on:
Classic

சேலம் உருக்காலை வளாகத்தில் ராணுவ தளவாட உதிரிபாங்கள் தயாரிப்பு ஆலை அமைக்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி  அறிவித்துள்ளார். 

சேலம் அரசுப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறைவு பெற்ற 11 திட்டங்கள் மற்றும் பாலங்களை முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர், சாலை வசதி சிறப்பாக இருந்தால்தான் தொழில்துறை வளர்ச்சியடையும் என்றும், அனைத்து வசதிகளையும் பெற உள்கட்டமைப்பு வசதிகள் அவசியம் என்றும் கூறினார். சேலம் உருக்காலை வளாகத்தில் ராணுவ தளவாட உதிரிபாகங்கள் தயாரிப்பு ஆலை அமைக்கப்படும் என்றும் சென்னைக்கு அருகே 2000 கோடி ரூபாயில் உணவுப்பூங்கா அமைக்கப்பட இருப்பதாகவும் தெரிவித்தார். 

கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு தமிழக அரசு முன்னுரிமை அளித்து வருவதாகவும், குடிமராமத்துப் பணிகள் விவசாயிகளின் பங்களிப்புடன் சிறப்பாக நடைபெற்று வருவதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்.

News Counter: 
100
Loading...

aravind