ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா தடுமாற்றம்

share on:
Classic

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள கோலி தலைமையிலான இந்திய அணி, தற்போது 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் பங்கேற்கிறது. இதன் முதல் போட்டி, அடிலெய்டில் இன்று தொடங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது.

தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ராகுல் 2 ரன்களிலும், முரளி விஜய் 11 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் கோலி 3 ரன்களிலும், ரஹானே 13 ரன்களிலும் அடுத்தடுத்து பெவிலியன் திரும்பி அதிர்ச்சியளித்தனர். 41 ரன்களை சேர்ப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி, ஆஸ்திரேலிய பந்துவீச்சை எதிர்தகொள்ள முடியாமல் திணறி வருகிறது.

News Counter: 
100
Loading...

sasikanth