INDvsAUS 3rd ODI : கோலி சதம் அடித்தும் இந்தியா தோல்வி..!

share on:
Classic

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதனால், கேப்டன் கோலியின் சதம் வீணானது.

ராஞ்சியில் நடைபெற்ற இப்போட்டியில், முதலில் பேட்டிங் ஆஸ்திரேலிய அணி ஃபிஞ்ச் - கவாஜாவின் அபார ஆட்டத்தால், 50 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 313 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கவாஜா 104 ரன்களும், ஃபிஞ்ச் 93 ரன்களும் எடுத்தனர். இந்திய அணித்தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

314 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு, ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் அதிர்ச்சியளித்தனர். தொடக்க ஆட்டக்காரர்கள் ஷிகர் தவான், ரோஹித் சர்மா மற்றும் ராயுடு ஆகியோர் ஆஸ்திரேலியாவின் மிரட்டலான பந்துவீச்சுக்கு தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். ரசிகர்களின் ஆரவாரத்துடன் களமிறங்கிய உள்ளூர் நாயகனான தோனியும், 26 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். மறுமுனையில் பொறுப்புடன் விளையாடிய கோலி, தனது 41-வது சதத்தை பதிவு செய்தார்.

News Counter: 
100
Loading...

Ragavan