INDvsAUS 3rd ODI : இந்தியாவுக்கு 314 ரன்களை வெற்றி இலக்கு

share on:
Classic

ராஞ்சியில் நடைபெற்றுவரும் 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இந்தியாவுக்கு 314 ரன்களை வெற்றி இலக்காக ஆஸ்திரேலியா நிர்ணயித்துள்ளது.

இப்போட்டியில், டாஸ் வென்ற இந்திய கேப்டன் கோலி, ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். இதனைத் தொடர்ந்து, களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டன் ஃபிஞ்ச் - கவாஜா இணை சிறப்பான தொடக்கம் அளித்தது. இந்திய பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொண்ட இவ்விருவரும் அதிரடியாக விளையாடி ரன் சேர்த்தனர். முதல் விக்கெட்டுக்கு 193 ரன்கள் சேர்த்த நிலையில், சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஃபிஞ்ச், 93 ரன்களில் குல்தீப் யாதவ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் பொறுப்புடன் விளையாடி கவாஜா சதம் விளாசி அசத்தினார்.

News Counter: 
100
Loading...

Ragavan