INDvsAUS 3-வது ODI : இந்திய வீரர்கள் தீவிர பயிற்சி..!

share on:
Classic

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3-வது ஒருநாள் போட்டி, ஜார்க்கண்டில் நாளை நடைபெறுகிறது. இதில் வெற்றிபெற்று தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணி உள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி, தற்போது 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில், முதல் இரு போட்டிகளிலும் இந்தியா அபார வெற்றி பெற்று தொடரில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில், இவ்விரு அணிகள் மோதும் 3-வது ஒருநாள் போட்டி ராஞ்சியில், நாளை நடைபெறுகிறது. இதில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியுடன் தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி உள்ளது. இதனையொட்டி ராஞ்சி மைதானத்தில் இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது, யார் அதிக தூரம் சிக்சர் அடிப்பது என வீரர்கள் போட்டி போட்டு விளையாடினர். இந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பிசிசிஐ பகிர்ந்துள்ளது.

News Counter: 
100
Loading...

Ragavan