ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 தொடரை சமன் செய்தது இந்தியா

share on:
Classic

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டி-20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றிபெற்று தொடரை சமன் செய்தது.

3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில், பிரிஸ்பேனில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது. மெல்போர்னில் நடைபெற்ற 2-வது ஆட்டம் கைவிடப்பட்ட நிலையில், 3-வது மற்றும் கடைசி டி-20 போட்டி, சிட்னியில் நடைபெற்றது.

டாஸ் வென்று முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்தது. 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது.

விராட்கோலியின் அதிரடி ஆட்டத்தால், 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து, 19 புள்ளி 4 ஓவரில் வெற்றி இலக்கை எட்டியது. அதிகபட்சமாக விராட்கோலி 61 ரன்களும், தவான் 41 ரன்களும் குவித்தனர். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடர், 1-1 என்ற புள்ளிக் கணக்கில் சமனில் முடிவடைந்தது.

News Counter: 
100
Loading...

sasikanth