சிட்னி டெஸ்டில் பதற்றத்துடன் ஆடும் ஆஸ்திரேலியா

share on:
Classic

சிட்னி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட் இழப்பிற்கு 215 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடக்கும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்புக்கு 622 குவித்து டிக்ளேர் செய்தது. இதனையடுத்து ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சை தற்போது விளையாடி வருகிறது. இந்திய நேரப்படி காலை 10:30 மணியளவில் ஆஸ்திரேலியா 6 விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் எடுத்துள்ளது.

ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக 79 ரன்கள் எடுத்த ஹாரீஸ், ஜடேஜா பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் டிம் பெயின் 5 ரன்களில் வெளியேறியது அந்நாட்டு ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

News Counter: 
100
Loading...

sasikanth