ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில், இந்திய அணி நிதான ஆட்டம்

Classic

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில், இந்திய அணி நிதானமாக விளையாடி ரன் சேர்த்து வருகிறது.

இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் கடைசி மற்றும் 4-வது டெஸ்ட் போட்டி, சிட்னியில் தொடங்கியுள்ளது. இப்போட்டிக்கான 11 பேர் கொண்ட இந்திய அணியில், உடல் தகுதியடையாத ஆல்ரவுண்டர் அஸ்வினுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. தொடக்க ஆட்டக்காரர் ராகுல் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டார்.

இப்போட்டியில், டாஸ் வென்ற கேப்டன் விராட் கோலி பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இதனையடுத்து, அகர்வாலும், ராகுலும் இந்திய அணிக்கு தொடக்கம் அளித்தனர். ஆஸ்திரேலிய பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறிய ராகுல், 9 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.

பின்னர் அகர்வாலுடன் இணைந்த புஜாரா பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மறுமுனையில், அரைசதம் விளாசி அசத்திய அகர்வால், 77 ரன்கள் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். சற்றுமுன்வரை இந்திய அணி 52 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்துள்ளது.

News Counter: 
100
Loading...

sasikanth