இரட்டை சதத்தை தவறவிட்டார் புஜாரா

share on:
Classic

சிட்னி டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட இந்திய வீரர் புஜாரா, 193 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். 

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி, சிட்னியில் தொடங்கியது. இதில் முதலில் பேட்டிங் செய்ய தொடங்கிய இந்திய அணி, மயாங்க் அகர்வாலின் அரைசதம் மற்றும் புஜாராவின் அபார சதத்தால் முதல் நாள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 303 ரன்கள் எடுத்திருந்தது.

அப்போது, புஜாரா 130 ரன்களுடனும், விஹாரி 39 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். தொடர்ந்து 2-வது நாள் ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணிக்கு, ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. ஆஸ்திரேலிய பந்துவீச்சை எதிர்கொள்ள தடுமாறிய விஹாரி, கூடுதலாக 3 ரன்கள் மட்டுமே சேர்த்து ஆட்டமிழந்தார்.  பின்னர் வந்த ரிஷப் பண்ட்டும், நிதானமாக விளையாடி ரன் சேகரிப்பில் ஈடுபட்டார். மறுமுனையில், ஆஸ்திரேலிய  வீரர்களை திணறடித்த புஜரா, 150 ரன்களை கடந்து அசத்தினார்.

புஜாரா - பண்ட் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி, 400 ரன்களை கடந்தது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இரட்டை சதம் விளாசி சாதனை படைப்பார் என எதிர்பார்க்கப்பட்ட புஜாரா, 193 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.

News Counter: 
100
Loading...

sasikanth