சிட்னி டெஸ்டில் இந்திய வீரர் புஜாரா ராஜ்ஜியம்

Classic

சிட்னி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களை சிறப்பாக எதிர்கொண்டு, இந்திய வீரர் புஜாரா 150 ரன்களை கடந்து அசத்தியுள்ளார்.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி, சிட்னியில் தொடங்கியது. இதில் முதலில் பேட்டிங் செய்ய தொடங்கிய இந்திய அணி, மயாங்க் அகர்வாலின் அரைசதம் மற்றும் புஜாராவின் அபார சதத்தால் முதல் நாள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 303 ரன்கள் எடுத்திருந்தது.

அப்போது, புஜாரா 130 ரன்களுடனும், விஹாரி 39 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். தொடர்ந்து 2-வது நாள் ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணிக்கு, ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. ஆஸ்திரேலிய பந்துவீச்சை எதிர்கொள்ள தடுமாறிய விஹாரி, கூடுதலாக 3 ரன்கள் மட்டுமே சேர்த்து ஆட்டமிழந்தார்.

பின்னர் வந்த ரிஷப் பண்ட்டும், நிதானமாக விளையாடி ரன் சேகரிப்பில் ஈடுபட்டார். மறுமுனையில், ஆஸ்திரேலிய வீரர்களை திணறடித்த புஜரா, 150 ரன்களை கடந்து அசத்தினார். சற்றுமுன்வரை இந்திய அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட் இழப்புக்கு 389 ரன்கள் எடுத்துள்ளது.

News Counter: 
100
Loading...

sasikanth