ஆஸ்திரேலிய மண்ணில் தொடரை வென்று சரித்திரம் படைக்கவுள்ள கோலி படை

share on:
Classic

இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் 4-வது டெஸ்ட் போட்டியின் கடைசிநாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், இப்போட்டி டிராவடையவே அதிக வாய்ப்புள்ளதால், ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக தொடரை வென்று, கோலிபடை சரித்திரம் படைப்பது உறுதியாகியுள்ளது.

சிட்னியில் நடைபெற்று வரும் இப்போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி, முதல் இன்னிங்சில் 622 ரன்கள் குவித்தது. இதனையடுத்து, முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி, முதல் இன்னிங்சில் 300 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால், அந்த அணிக்கு இந்தியா ஃபாலோ-ஆன் வழங்கியது.

தொடர்ந்து 2-வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி, விக்கெட் இழப்பின்றி 6 ரன்கள் எடுத்திருந்தபோது, போதிய வெளிச்சமின்மை காரணமாக 4-வது நாள் ஆட்டம் நிறுத்தப்பட்டது.

ஆஸ்திரேலிய அணி 316 ரன்கள் பின்தங்கியுள்ள நிலையில், மழை காரணமாக கடைசிநாள் ஆட்டத்தின் முதல் செஷ்ஷன் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், கடைசி டெஸ்ட் போட்டி டிராவில் முடியவே அதிக வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்காரணமாக, இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை வெல்வது உறுதியாகியுள்ளது. அத்துடன், முதல்முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று கோலி தலைமையிலான படை சரித்திர சாதனை படைக்கவுள்ளது.

News Counter: 
100
Loading...

aravind