வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி

share on:
Classic

கொல்கத்தாவில் நடந்த முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி  இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது.  

இந்தியாவும் - வெஸ்ட் இண்டீஸ் அணிகளும் மோதிய முதலாவது டி-20- கிரிக்கெட்போட்டி, கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. அதில் முதலில் டாஸ்வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித்  சர்மா, பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி  20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து, 109 ரன்களுடன் ஆட்டமிழந்தது. பின்னர் 110 ரன்களை எட்டினால் வெற்றி என்ற எளிதான இலக்கில்  களமிறங்கிய இந்திய அணி,  17.5 ஒவர்களில் 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து அபார வெற்றி பெற்றது. இறுதியில் தினேஷ் கார்த்திக் 31 ரன்களுடனும், குர்னால் பாண்ட்யா 21 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

News Counter: 
100
Loading...

sasikanth