தரை இறங்கியது இன்சைட் விண்கலம்..

share on:
Classic

செவ்வாய் கிரகத்தின் நிலப்பரப்பை ஆழமாக ஆய்வு செய்யும் நோக்கில் அனுப்பட்ட இன்சைட் விண்கலம் தரை இறங்கியது அதோடு அது  எடுத்த முதல் புகைப்படத்தையும் நாசாவுக்கு அனுப்பியுள்ளது.

1976ஆம் ஆண்டு முதல் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா செவ்வாய் கிரகம் குறித்த ஆராய்ச்சியை மேற்கொண்டிருக்கிறது .அதோடு  பல விண்கலங்களையும் செவ்வாய்க்கு அனுப்பி ஆய்வு மேற்கொண்டு வருகிறது .

அந்த வகையில் நாசாவின் 9வது செவ்வாய் கிரக ஆராய்ச்சி விண்கலமான இன்சைட் செவ்வாய் கிரகத்தின் தரையில் கால் பதித்துள்ளது. மூன்று கால்களைக் கொண்ட இன்சைட் தனது வேகத்தைக் குறைத்துக்கொண்டே வந்து என்ஜினிலிருந்து விடுபட்டு தரையிரங்கியுள்ளது. செவ்வாய் கிரகத்தின் நிலப்பரப்பை ஆழமாக ஆய்வு செய்யும் நோக்கில் அனுப்பட்ட இன்சைட் விண்கலம், தரை இறங்கியதும் எடுத்த முதல் புகைப்படத்தையும் நாசாவுக்கு அனுப்பியுள்ளது. 

அதனை நாசா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது மே மாதம் விண்ணுக்கு அனுப்பப்பட்ட இது ஆறு மாதங்களில் சுமார் 548 மில்லியன் கி.மீ. தொலைவு பயணித்து செவ்வாய் கிரகத்தை அடைந்துள்ளதுள்ளதும் குறிப்பிடதக்கது .

 

News Counter: 
100
Loading...

aravind