இன்ஸ்டகிராம் ஸ்டோரியில் புதிய அம்சம்

Classic

சமூக வலைத்தளமான இன்ஸ்டகிராமில் ஸ்டோரி அப்டேட் செய்வதில் ரீ போஸ்ட் என்ற புதிய அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக் இன்ஸ்டகிராமை வாங்கிய பிறகு அதில் பல அதிரடி மாற்றங்கள் கொண்டுவரப்பட்டது. சில நாட்களிலே இன்ஸ்டகிராம் உலகமெங்கும் பிரபலமானது. இதில் முதல் முறையாக ஸ்டோரி என்ற அம்சம் கொண்டு வரப்பட்டது. அதன் அடிப்படையில் ஃபேஸ்புக், வாட்ஸ் ஆப்பிலும் கொண்டுவரப்பட்டது. தற்போது இன்ஸ்டகிராம் ஸ்டோரிக்கு புது அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

இதுவரை, இன்ஸ்டகிராம் ஸ்டோரியில் மற்றொருவரின் அக்கவுண்டை குறிப்பிட முடியும். தற்போது , தங்கள் பெயரை குறிப்பிட்டு யாராவது ஸ்டோரி போட்டால் அதனை ரீ-போஸ்ட் செய்யும் அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இன்ஸ்டகிராமில் பதிவேற்றும் வீடியோக்களின் நேரத்தை அதிகரிக்கவும் அந்நிறுவனம் புதிய அம்சத்தை உருவாக்கி வருவதாக கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

News Counter: 
100

Parkavi