”கைத்தட்டல்களுக்காக காவலாளிகளை அவமதிக்கின்றனர்”

share on:
Classic

நக்சலைட்டுகளுடன் சேர்ந்து கொண்டு காங்கிரஸ் நாட்டை துண்டாட முயற்சிப்பதாக பிரதமர் மோடி கடுமையாக சாடியுள்ளார் 

சத்தீஸ்கர் மாநிலம் பதாபாரா பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். அப்போது, "மோடி திருடன்" என பெயர் வைத்து, காங்கிர எல்லையை கடந்து பேசுவதாக குற்றம்சாட்டினார். காவலாளி என்பதை திருடன் என குறிப்பிடுவது எத்தகைய அரசியல்? என கேள்வி எழுப்பிய பிரதமர் மோடி, முழு சமூகத்தையும் அவர்கள் திருடர்களாக மாற்றியுள்ளதாக குற்றம்சாட்டினார். 

கைத்தட்டல்களை பெறுவதற்காக சவ்கிதார் எனும் காவலாளிகளை அவர்கள் அவமதிப்பதாகவும் சாடினார். மேலும், நக்சலைட்டுகளுடன் சேர்ந்து கொண்டு நாட்டை பிரிக்க காங்கிரஸ் முயற்சிப்பதாகவும் அவர் கடுமையாக சாடினார்.

 

News Counter: 
100
Loading...

aravind