காஷ்மீரில் மிகப்பெரிய தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டம்..!!

share on:
Classic

காஷ்மீரில் மிகப்பெரிய தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

புல்வாமாவில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட துணை ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து இந்திய ராணுவம் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். இந்நிலையில் ஸ்ரீநகர் அவந்திபுரா பகுதியில் மிகப்பெரிய தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக மத்திய உளவுப்பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் காஷ்மீரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. விமான நிலையங்கள் மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். நாளை மறுநாள் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் தீவிரவாதிகளின் இந்த அச்சுறுத்தல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News Counter: 
100
Loading...

Ragavan