தலப்பாகட்டி பெயரை பயன்படுத்த 7 பிரியாணி கடைகளுக்கு தடை..!

share on:
Classic

தலப்பாகட்டி என்ற பெயரையோ அதன் வணிக குறியீடையோ பயன்படுத்த 7 பிரியாணி கடைகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணி உணவகம் சார்பில் அதன் பங்குதாரர் நாகசாமி தங்கள் நிறுவனத்தின் தலப்பாக்கட்டி, தலப்பாகட்டு போன்ற பெயர்களையும், வணிக சின்னத்தையும் பயன்படுத்த 7 தனியார் உணவகங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன், தலப்பாக்கட்டி பெயரை பயன்படுத்த கோடம்பாக்கம் தலப்பாக்கட்டு பிரியாணி உள்ளிட்ட 7 உணவகங்களுக்கு தடை விதித்து இந்த மனுவுக்கு பதிலளிக்கும்படி உத்தரவிட்டார்.

News Counter: 
100
Loading...

Ragavan