இலங்கையில் மரண தண்டனை சட்டத்திற்கு இடைக்கால தடை..!

share on:
Classic

இலங்கையில் மரண தண்டனை விதிக்கும் சட்டத்திற்கு அந்நாட்டு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. 

இலங்கையில் கடந்த 43 ஆண்டுகளாக மரண தண்டனை விதிக்கும் நடைமுறை இல்லாமல் இருந்தது. இந்நிலையில், போதை மருந்து குற்றத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட 4 பேருக்கு மரண தண்டனையை நிறைவேற்றும் உத்தரவிற்கு அந்நாட்டு அதிபர் சிறிசேன ஒப்புதல் அளித்தார். போதை மருந்து குற்றத்தை தடுப்பதற்காகவே இதனை செயல்படுத்துவதாகவும் அவர் விளக்கமளித்திருந்தார். 

இதுதொடர்பாக, அந்நாட்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் 4 பேரின் தண்டனையையும் நிறைவேற்ற வரும் அக்டோபர் 30ஆம் தேதி வரை இடைக்கால தடை விதித்துள்ளது.

News Counter: 
100
Loading...

aravind