பட்ஜெட் தாக்கல் தேதி அறிவிப்பு... பாஜக அரசின் கடைசி பட்ஜெட்?...

Classic

அடுத்த மாதம் 1-ஆம் தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. 

அடுத்தாண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதை முன்னிட்டு நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் பரப்புரை பணிகளுக்கான ஏற்பாடுகளில் தீவிரமாக இறங்கியுள்ளன. இந்த நிலையில், மத்திய அரசின் நடப்பு ஆட்சி காலத்திற்கான கடைசி பட்ஜெட் அடுத்த மாதம் 1-ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஃபிப்ரவரி 1-ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் இது இடைக்கால பட்ஜெட்டாக இருக்கும் என்றும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 31-ஆம் தேதி தொடங்கி ஃபிப்ரவரி 13-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. 

News Counter: 
100
Loading...

mayakumar