சூப்பர் டீலக்ஸ் படத்திற்கு சர்வதேச அங்கீகாரம்..!! Bucheon சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட முடிவு..!!

share on:
Classic

தமிழ் சினிமாவின் அரிய படைப்புகளில் ஒன்றாக கருதப்படும் சூப்பர் டீலக்ஸ் படம் சர்வதேச ஃபெண்டாஸ்டிக் திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ளது. 

தியாகராஜா குமாராஜா இயக்கிய சூப்பர் டீலகஸ் திரைப்படம், கடந்த மார்ச் 29-ம் தேதி வெளியானது. விஜய் சேதுபதி, சமந்தா, பக்த் ஃபாசில், ரம்யா கிருஷ்ணன், மிஷ்கின், பகவதி பெருமாள், காய்த்ரி சங்கர் பலர் இப்படத்தில் நடித்திருந்தனர். பொதுவாக, பலரும் சொல்ல தயங்கும் வித்தியாசமான கதைக்களம், அதனை சொன்ன விதம், நடிகர்களின் தேர்வு, அவர்களின் கணகச்சிதமான நடிப்பு என பலரும் படத்தை கொண்டாடினார். தமிழ் சினிமாவின் அரிய படைப்புகளில் ஒன்றாக கருதப்பட்ட இப்படத்திற்கு ஒரு பிரிவினர் கடுமையாக விமர்சித்தும் கருத்து தெரிவித்தனர். 

இந்நிலையில் சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்திற்கு சர்வதேச அங்கீகாரம் கிடைக்க தொடங்கியுள்ளது. வரும் 27 முதல் ஜூலை 7 வரை கொரியாவில் நடைபெற உள்ள மதிப்புமிக்க 23-வது புச்சியோன் (Bucheon International Fantastic Film Festival) சர்வதேச ஃபெண்டாஸ்டிக் பிலிம் பெஸ்டிவலில் திரையிடப்பட உள்ளது. அறிவு சார்ந்த, உணர்சிகளை அதிகளவில் கொண்டாடப்படும் படங்கள் திரையிடப்படும், பிஃபான் விழாவில் உலக பெண்டாஸ்டிக் புளூ பிரிவில் இப்படத்திற்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்தாதுன், கல்லி பாய் மற்றும் மணிகர்னிகா ஆகிய இந்திய படங்களும் இந்த விழாவில் பங்கேற்க உள்ளன. 

News Counter: 
100
Loading...

Ramya