ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகாரை விசாரிக்க குழு அமைப்பு..!

share on:
Classic

தலைமை நீதிபதி ரஞ்சன்கோகாய் மீதான புகார் தொடர்பாக, விசாரிக்க முன்னாள் நீதிபதி ஏ.கே. பட்நாயக் தலைமையிலான குழு அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், பாலியல் தொல்லை அளித்ததாக உச்ச நீதிமன்ற முன்னாள் பெண் ஊழியர் புகார் அளித்திருந்தார். அந்தப் புகார் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தப் புகாரை விசாரிக்க இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வை ரஞ்சய் கோகாய்க்கு அடுத்த நிலையிலுள்ள நீதிபதி எஸ்.ஏ.பாப்தே நியமித்துள்ளார். இந்த நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, தலைமை நீதிபதி ரஞ்சன்கோகாய் மீதான புகார் தொடர்பாக, விசாரிக்க முன்னாள் நீதிபதி ஏ.கே. பட்நாயக் தலைமையிலான குழு அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

News Counter: 
100
Loading...

aravind