INX வழக்கு : 2 மணி நேரத்தில் ஆஜராக ப. சிதம்பரத்திற்கு சிபிஐ உத்தரவு..!!

share on:
Classic

INS வழக்கில் ப. சிதம்பரத்திற்கு முன் ஜாமின் மறுக்கப்பட்டத்தை அடுத்து 2 மணி நேரத்தில் ஆஜராக ப.சிதம்பரத்திற்கு சிபிஐ உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் மத்திய நிதி அமைச்சராக ப.சிதம்பரம் இருந்த போது கடந்த 2007 ஆம் ஆண்டு  ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் ரூ.305 கோடி வெளிநாட்டு நிதியை பெறுவதற்கு, அந்நிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் ஒப்புதல் வழங்கியதில் முறைகேடுகள் நடைபெற்றதாக ப. சிதம்பரம் மீது சட்டவிரோத பணபரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையும், முறைகேடு நடந்தது தொடர்பாக சிபிஐ-யும் வழக்குப்பதிவு செய்தன. இதனை தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி 28- ந் தேதி கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இது தொடர்பாக மேலும் ஒரு குற்றவழக்கு சிபிஐ பதிவு செய்து அவை டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன் ஜாமின் கோரி தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் ப.சிதம்பரத்தின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து நேற்று இரவு நான்கு சிபிஐ அதிகாரிகள் சிதம்பரம் வீட்டிற்கு சென்றதால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது. ப. சிதம்பரம் வீட்டில் நோட்டீஸ் ஒட்டியுள்ளனர். அந்த நோட்டீசில் ப.சிதம்பரம் இரண்டு மணி நேரத்தில் சிபிஐ அலுவலகத்தில் நேரடியாக ஆஜராக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சிதம்பரத்திற்கு அந்த நோட்டீஸின் நகலை மின்னஞ்சல் வாயிலாகவும் அனுப்பி வைத்துள்ளனர்.  

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan