IPL 2019 : 39 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி..!

share on:
Classic

ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில், டெல்லி அணி வெற்றிபெற்றது.

ஹைதராபாத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி, ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய டெல்லி அணியின் தொடக்க வீரர்களான பிரித்வி ஷா மற்றும் தவான் ஆகியோர் சொர்ப்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய வீரர்கள் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன் குவிப்பில் ஈடுபட்டனர். டெல்லி அணி, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக முன்ரோ 40 ரன்களும், ஷ்ரேயாஸ் ஐயர் 45 ரன்களும் குவித்தனர். ஹைதராபாத் தரப்பில் கலீல் அஹமது 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஹைதராபாத் அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களான வார்னர் மற்றும் பேர்ஸ்டோ ஆகியோர் நிலைத்து நின்று விளையாடி ரன் குவித்தனர். வார்னர் 51 ரன்னிலும், பேர்ஸ்டோ 41 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். டெல்லி அணி வீரர்களின் பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல், பின்னர் களமிறங்கிய வீரர்கள் அடுத்தடுத்து ஒற்றை இலக்கு ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால், 18.5 ஓவரில் ஹைதராபாத் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன்மூலம், 39 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றிபெற்றது. அதிகபட்சமாக ரபடா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

3 விக்கெட்டுகள் வீழ்த்தி அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த கீமா பால்-க்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்த வெற்றியின் மூலம், டெல்லி அணி 10 புள்ளிகள் பெற்று புள்ளிப் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது.

News Counter: 
100
Loading...

Ragavan