IPL 2019 : 100 வெற்றிகளை குவித்த முதல் கேப்டன் தோனி..!

share on:
Classic

ராஜஸ்தான் அணியை சென்னை அணி வீழ்த்தியதன் மூலம், ஐ.பி.எல் போட்டி வரலாற்றில் 100 வெற்றிகளை குவித்த முதல் கேப்டன் என்ற சாதனையை தோனி படைத்துள்ளார்.

ஜெய்பூரில் நடந்த ஐ.பி.எல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இப்போட்டியில் முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி, 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ் 28 ரன்கள் எடுத்தார். குறிப்பாக, சாகர் வீசிய 3 வது ஓவரில் ரகானே எல்.பி.டபள்யூ ஆனார். அதற்கு அம்பயர் நாட் அவுட் கொடுத்தார். இதனையடுத்து, ரிவியூ கேட்குமாறு சாகர் முறையிட, தோனி நீண்ட யோசனைக்குப் பிறகு கடைசி நொடியில் ரிவ்யூ கேட்டார். அதற்கு பலனாக ரகானே, எல்.பி.டபள்யூ அவுட் என அறிவிக்கப்பட்டார்.

பின்னர், 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. வாட்சன் உள்ளிட்டோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்து 24 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து சென்னை அணி தவித்தது. இதனையடுத்த களம் கண்ட தோனி 58 ரன்களிலும், ராயுடு 57 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். கடைசி ஓவரில் 6 பந்துகளுக்கு 18 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை இருந்தது. அந்த ஓவரில் ஸ்டோக்ஸ் வீசிய பந்து ஒன்றை ஒரு நடுவர் நோ பால் என்று அறிவித்தார். மற்றொரு நடுவர் அதனை நிராகரித்தார். இதனால், ஆத்திரமடைந்த தோனி, நேரடியாக களத்துக்கே சென்று நடுவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இருப்பினும், சென்னை அணி கடைசி பந்து திரில்லாக வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் முதலிடத்தை பிடித்தது.

News Counter: 
100
Loading...

Ragavan