IPL 2019 : பெங்களூருவை வீழ்த்தியது மும்பை..!

share on:
Classic

பெங்களூர் அணிக்கு எதிரான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் மும்பை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

மும்பையில் நடைபெற்ற இப்போட்டியில், டாஸ் வென்ற மும்பை அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய பெங்களுரு அணியின் வீரர்கள் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். விராட்கோலி 8 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். டி வில்லியர்ஸ் அதிரடியாக விளையாடி 75 ரன்கள் குவித்தார். மொயீன் அலி 50 ரன்களும், பார்த்திவ் பட்டேல் 28 ரன்களும் குவித்தனர். 20 ஓவர்கள் முடிவில், அந்த அணி 7 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் குவித்தது. மும்பை தரப்பில் அபாரமாக பந்துவீசிய மலிங்கா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி வீரர்கள் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். தொடக்க வீரர்களாக களமிறங்கிய டீ காக் 40 ரன்களும், ரோஹித் ஷர்மா 21 ரன்களும் சேர்த்தனர். பாண்டியா 16 பந்துகளில் 37 ரன்கள் குவித்தார். அந்த அணி, 19 ஓவரில் 172 ரன்கள் குவித்து, 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.

இந்தப் போட்டியில் 4 விக்கெட் வீழ்த்திய மும்பை வீரர் மலிங்கா ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். புள்ளிப் பட்டியலில் மும்பை அணி 10 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளது. ஒரு வெற்றியுடன் 2 புள்ளிகள் மட்மே பெற்றுள்ள பெங்களூர் அணி தொடர்ந்து கடைசி இடத்தில் நீடிக்கிறது.

News Counter: 
100
Loading...

Ragavan