IPL 2019 : மும்பை அணி கடைசி பந்தில் திரில் வெற்றி..!

share on:
Classic

பஞ்சாப் அணிக்கு எதிரான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில், மும்பை அணி வெற்றிபெற்றது.

மும்பையில் நடைபெற்ற இப்போட்டியில், டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களான, ராகுலும், கெயிலும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கே.எல். ராகுல் 100 ரன்னும், கிறிஸ் கெயில் 64 ரன்னும் சேர்த்தனர். அந்த அணி 20 ஓவர்கள் முடிவில், 4 விக்கெட் இழப்புக்கு 197 ரன்கள் குவித்தது. மும்பை தரப்பில் ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

198 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி வீரர்கள் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். தொடக்க வீரர்களாக களமிறங்கிய டீ காக் 24 ரன்களிலும், சித்தேஷ் 15 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் களமிறங்கிய பொல்லார்ட் அதிரடி ரன்குவிப்பில் ஈடுபட்டார். அவர் 31 பந்துகளில் 10 சிக்சர் மற்றும் 3 ஃபோர் உட்பட 83 ரன்கள் குவித்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார். கடைசி ஓவரில் 15 ரன்கள் எடுக்கவேண்டும் என்ற நிலையில், பொல்லார்ட் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். கடைசி பந்துக்கு 2 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற பரபரப்பான கட்டத்தில், ஜோசப் 2 ரன்கள் எடுத்து அணியை வெற்றிபெறவைத்தார். இதன்மூலம் மும்பை அணி 8 புள்ளிகளுடன் 3 இடத்திற்கு முன்னேறியது. மும்பை அணியின் பொல்லார்ட் ஆட்டநாயகநாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

News Counter: 
100
Loading...

Ragavan