IPL 2019 : மும்பை அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!

share on:
Classic

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில், கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே ஐபிஎல் இறுதி மற்றும் 56-வது லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கிரிஸ் லின் 41 ரன்களும் ராபின் உத்தப்பா 40 ரன்களும் எடுத்தனர். மலிங்கா அதிகபட்சாம 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி 16.1 ஓவர்களில் 1 விக்கெட்டை மட்டும் இழந்து 134 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் மும்பை அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பை அணியின் ரோகித் சர்மா 55 ரன்கள் எடுத்தார்.

News Counter: 
100
Loading...

Ragavan