IPL 2019 : பஞ்சாப் அணி 18 ஓவரில் 173 ரன்கள் எடுத்து வெற்றி..!

share on:
Classic

சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சென்னை - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான ஐ.பி.எல் போட்டி மொகாலியில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக டூபிளசிஸ் 96 ரன்களும், சுரேஷ் ரெய்னா 53 ரன்களும் எடுத்தனர்.

இதனையடுத்து, களமிறங்கிய பஞ்சாப் அணி 18 ஓவரில் 173 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அந்த அணியில் அதிரடியாக விளையாடிய லோகேஷ் ராகுல் 36 பந்துகளில் 71 ரன்கள் எடுத்து பஞ்சாப் அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.

News Counter: 
100
Loading...

Ragavan