IPL 2019 : மும்பை அணியை வீழ்த்தியது ராஜஸ்தான் ராயல்ஸ்..!

share on:
Classic

மும்பை இந்தியன்சுக்கு எதிரான ஐ.பி.எல் டி 20 கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

ராஜஸ்தானில் நடைபெற்ற ஐ.பி.எல் டி 20 கிரிக்கெட் போட்டியின் லீக் சுற்று ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் உடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மோதியது. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது. சிறப்பாக விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்தது. நிதானமாக விளையாடிய குயிண்டன் டி காக் 47 பந்துகளில் 65 ரன்கள் விளாசினார்.

162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் 19-வது ஓவரிலேயே 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடியது. அதிரடி ஆட்டக்காரான ஸ்டீவன் சுமித் 48 பந்துகளில் 59 ரங்கள் எடுத்து வெற்றிக்கு வித்திட்டார். சிறப்பாக விளையாடிய ஸ்டீவன் சுமித் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

 

News Counter: 
100
Loading...

Ragavan