ஐபிஎல் 2019 : முதல் வெற்றியை பதிவு செய்தது பெங்களூரு அணி..!!

share on:
Classic

கோலி, டிவில்லியர்சின் அபார ஆட்டத்தால், பஞ்சாப் அணியை வீழ்த்தி நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் வெற்றியை பெங்களூரு அணி பதிவு செய்துள்ளது.

சண்டிகரில் நடைபெற்ற இப்போட்டியில், முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணி, கிறிஸ் கெய்லின் அதிரடியால் 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் குவித்தது. அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல், 10 பவுண்டரி, 5 சிக்சர்களுடன் 99 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணி, பேட்ஸ்மேன்கள் நிதானமாக விளையாடி ரன்களை குவிக்கத் துவங்கினர். பர்தீவ் பட்டேல் 19 ரன்களில் ஆட்டமிழந்த போதிலும், கேப்டன் விராட் கோலியும், டி வில்லியர்ஸூம் அதிரடியாக விளையாடி ரன் சேர்த்தனர். இவ்விருவரின் அதிரடியால் 19 புள்ளி 2 ஓவர்களில் 174 ரன்களை எடுத்து பெங்களூரு அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. டிவில்லியர்ஸ் 59 ரன்கள் விளாசி, கடைசிவரை ஆட்டமிழக்காமல் அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.

News Counter: 
100
Loading...

Ramya