IPL ஏலம்...70 பேருக்கு 1000 பேர் பதிவு...!

Classic

12வது ஐபிஎல் போட்டிக்கான வீரர்கள் ஏலம் இந்த மாதம் ஜெய்ப்பூரில் நடைப்பெற உள்ளது.  ஏற்கனவே முழுமையான ஏலம் நடந்து முடிந்த நிலையில் தற்போது காலியாக உள்ள இடங்களுக்கு மட்டுமே ஏலம் நடைபெற உள்ளது. இந்த முறை 70 வீரர்கள் மட்டுமே ஏலத்தின் மூலம் எடுக்கப்பட இருக்கிறார்கள். 

ஐபிஎல் 2019 12வது சீசனுக்கான ஏலம் ஜெய்ப்பூரில் வரும் டிசம்பர் 18-ம் தேதி மட்டும் நடைப்பெற இருக்கிறது. அணியின் சார்பில் பெரும்பாலான வீரர்கள் தக்கவைக்கப்பட்டுவிட்டதால் இந்த ஏலத்தில் 70 வீரர்கள் மட்டுமெ தேர்ந்தெடுக்க வாய்ப்பு உள்ளது.  இந்த 70 இடத்திற்கு 232 வெளிநாட்டு வீரர்கள் உள்பட சுமார் 1003 வீரர்கள் பதிவு செய்துள்ளனர்.

பட்டியலில் பதிவு செய்துள்ள வீரர்களில் 800 பேர் சர்வதேச போட்டி அனுபவம் இல்லாதவர்கள் ஆவர். மேலும், மிஜோரம், நாகலாந்து, சிக்கிம், உத்தரகாண்ட், புதுச்சேரி, அருணாச்சலபிரதேசம், மணிப்பூர், மேகாலயா,  மற்றும் பீகார் ஆகிய அணிகளை சேர்ந்த வீரர்கள் இந்த ஏலப்பட்டியலில் சேர்க்கப்பட்டு உள்ளனர்

உலகக் கோப்பை வரும் மே மாதம் துவங்க உள்ளதால் ஆஸ்திரேலிய வீரர்கள் இந்த முறை நடைப்பெறும் போட்டியில் பங்கேற்கமட்டார்கள் என கூறப்படுகிறது. 

 

News Counter: 
100
Loading...

aravind