இன்று IPL டிக்கெட் விற்பனை தொடக்கம்..!

share on:
Classic

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்குகிறது. 

பெரும் எதிர்பார்ப்புக்குள்ளாகியுள்ள 2019ம் ஆண்டுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி, வரும் 23ம் தேதி தொடங்க உள்ளது. அதன்படி முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோத உள்ளன. மேலும் ஐ.பி.எல். போட்டிகள் சென்னையில் தொடங்க உள்ளதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். இதற்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 11 மணிக்கு தொடங்க உள்ளதால், நேற்று மாலை முதலே கிரிக்கெட் ரசிகர்கள் சேப்பாகத்தை முற்றுகையிட தொடங்கியுள்ளனர். குறைந்தபட்ச டிக்கெட் விலையாக 1300 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

இந்த டிக்கெட்டுகள் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க கவுண்ட்டரில் மட்டுமே விற்பனை செய்யப்பட்ட உள்ளது. மேலும் 2500, 5000, 6,500 ஆகிய விலைகளிலும் டிக்கெட்கள் விற்பனை செய்யப்பட உள்ளன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சேப்பாக்கத்தில் மோதும் எஞ்சிய போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை விவரம் பின்னர் அறிவிக்கப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

News Counter: 
100
Loading...

sajeev