இந்திய ரசிகர்களின் அன்பால் நெகிழ்ந்த Iron Man : விரைவில் இந்தியா வர உள்ளதாகவும் தகவல்..!!

share on:
Classic

அயர்ன் மேன் ராபர்ட் டவுனி இந்திய ரசிகர்களின் அளவில்லாத அன்புக்கு தலைவணங்குவதாகவும், விரைவில் இந்தியா வர உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மார்வல் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அவென்ஞ்சர்ஸ் எண்ட்கேம் (Avengers Endgame) படம் வரும் 26ம் தேதி ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. அதற்கு முன்னதாக டெல்லி, மும்பை, சென்னை மற்றும் பெங்களூரு ஆகிய பகுதிகளில் உள்ள ரசிகர்களிடம் அயர்ன் மேன் புகழ் ராபர்ட் டவுனி லைவ் வீடியோ கான்பிரன்ஸில் கலந்துரையாடினார். அவரிடம் உள்ள அன்பை வெளிப்படுத்தும் விதமாக ரசிகர்கள் நடனமாடி உற்சாகப்படுத்தினர். அவரும் பதிலுக்கு நடனமாடினார். அப்போது ரசிகர்களுடன் உரையாடிய அவர் “ என்னால் இதை நம்பமுடியவில்லை. உங்களின் அளவில்லாத அன்புக்கு நான் கட்டுப்படுகிறேன், தலைவணங்குகிறேன். நீங்கள் அனைவரும் அற்புதமான ரசிகர்கள். நான் இதுவரை இந்தியாவுக்கு வராமல் இருந்ததை என்னால் நம்பமுடியவில்லை. இனிமேலும் என்னால் காத்திருக்க முடியாது. விரைவில் நான் அங்கு வருவேன் ” என்று தெரிவித்தார். 

News Counter: 
100
Loading...

Ramya